Home One Line P2 ரஜினிகாந்த்: நான் முதல்வராக இருக்க மாட்டேன், வேறொருவரை தேர்ந்தெடுப்பேன்!

ரஜினிகாந்த்: நான் முதல்வராக இருக்க மாட்டேன், வேறொருவரை தேர்ந்தெடுப்பேன்!

717
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசம் குறித்து பல காலமாக கூறிவந்ததை அடுத்து, அவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வெளியிட நேற்று வியாழக்கிழமை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு தாம் மாவட்டச் செயலாளர்களை சந்தித்ததாகவும், ஒரு விஷயத்தில் மட்டும் தமக்கு திருப்தியில்லை என்று சொன்னதைக் குறிப்பிட்டார்.

உண்மையில், தாம் 2017-இல் தான் அரசியலுக்கு வருவதாகக் கூறியதாகவும், பிறர் கூறுவதைப் போல 1996-இல் அரசியலுக்கு வருவதாகக் கூறியதில்லை என்று அவர் தெரிவித்தார். முன்னாள் தமிழக முதலமைச்சர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியல் நிலைத்தன்மை மோசமடைந்ததாகவும், மக்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று சொன்னதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

“மன மாற்றமில்லாமல் அரசியல் மாற்றம் நடந்தால், மீன் குழும்பு பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைத்தது போல் ஆகிவிடும்” என்று ரஜினி கூறினார்.

“திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் 60,000 கட்சிப் பதவிகள் இருக்கின்றன, தேர்தல் நேரத்தில் அது தேவைப்படும். அதற்குப் பின்னர் அது தேவைப்படாது. இதனால் எல்லா வழிகளிலும் ஒப்பந்தங்கள் கொடுத்து ஊழல் நடத்துவார்கள். ஆட்சிக்கு, கட்சிக்கு, மக்களுக்கு இது தீங்காகும். கட்சிப் பதவியைப் பலரும் தொழிலாகவே வைத்துள்ளார்கள். அதனால், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் பதவிகளையும் ஆட்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் போட்டோம்.” என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், தம் கட்சியில் சட்டமன்றங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம் என்றும், அதுவும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். அதேபோல ஐஏஎஸ், நீதிபதிகள் உள்ளிட்ட அறிவார்ந்தவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், தேசியக் கட்சிகளைத் தவிர, ஆட்சிக்கும் கட்சிக்கும் ஒரே தலைவர் இருக்க வேண்டும் என்றும் முதல்வராக இருப்பதில் தமக்கு எப்போது நாட்டம் இல்லை என்றும் கூறினார். கட்சித் தலைவராக மட்டுமே தொடர இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் இது குறித்து தாம் பலரிடம் பேசியதாகவும் அவர் கூறினார். இதை மாவட்டச் செயலாளர்கள் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அன்றைய அவருடைய வருத்தம் என்று ரஜினிகாந்த் கூறினார்.