Home One Line P2 தொடர்ந்து இரண்டாவது வாரமாக எண்ணெய் விலை சரிவு!

தொடர்ந்து இரண்டாவது வாரமாக எண்ணெய் விலை சரிவு!

733
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தொடர்ந்து இரண்டாவது வாரமாக, இன்று நள்ளிரவுத் தொடங்கி எரிபொருள் விலை குறையும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரோன்97 பெட்ரோல் 9 சென் குறைந்து லிட்டருக்கு 2.10 ரிங்கிட் ஆகவும், ரோன்95 பெட்ரோல் லிட்டருக்கு 7 சென் குறைந்து 1.82 ரிங்கிட்டாகவும் இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

டீசலின் விலையும் 9 சென் வீழ்ச்சியடைந்து லிட்டருக்கு 1.87 ரிங்கிட் என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

#TamilSchoolmychoice

புதிய கட்டணங்கள் நாளை சனிக்கிழமை முதல் மார்ச் 20 வரை நடைமுறைக்கு வரும்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கொவிட் -19 தொற்றுநோயால் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.