Home One Line P2 சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்

சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் இழப்பீட்டைச் சந்தித்துள்ளது! மொகிதின் யாசின்

798
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோலாலம்பூர்: கொவிட் -19 காரணமாக இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறை 3.37 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைச் சந்தித்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார்.

2020- ஆம் ஆண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 0.8 விழுக்காடு முதல் 1.2 விழுக்காடு வரை குறையும் – அல்லது 10.8 பில்லியன் ரிங்கிட் முதல் 17.3 பில்லியன் ரிங்கிட் வரை குறையும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 முதல் 4.0 விழுக்காடு வரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று முன்னர் கணிக்கப்பட்டது.

நேற்றிரவு ஒளிபரப்பப்பட்ட சிறப்பு உரையில், பிரதமர் இவ்வாறு கூறினார். வைரஸ் பாதிப்பின் விளைவாக பல சுற்றுலா திட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

சுற்றுலா, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ள துறைகள் என்று மொகிதின் கூறினார்.

“நாட்டின் பொருளாதாரத்தில், குறிப்பாக மக்கள் மீது தாக்கத்தை குறைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்.”

“எனவே, அறிவிக்கப்பட்ட பொருளாதார ஊக்கத்திட்டத்தை செயல்படுத்துவது கண்காணிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும். இதன் விளைவுகள் அனைவருக்கும் விரைவாக உணரப்படும்,” என்று அவர் கூறினார்.

பிப்ரவரி 27-ஆம் தேதியன்று, அப்போதைய இடைக்கால பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், கொவிட் -19 பாதிப்பு தொடர்புடைய பொருளாதார அபாயங்களை திறம்பட நிவர்த்தி செய்வதற்காக 20 பில்லியன் ரிங்கிட் பொருளாதார ஊக்கத்திட்டத்தை அறிவித்தார்.