Home One Line P1 மகாதீர் இனி நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் இல்லை! -அன்வார்

மகாதீர் இனி நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் இல்லை! -அன்வார்

788
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி இப்போது பிகேஆர், ஜசெக மற்றும் அமானா ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பிப்ரவரி 24-ஆம் தேதியன்று நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு பெர்சாத்து வழிவகுத்ததை அடுத்து, இந்த கூட்டணி மூன்று கட்சிகளாக குறைக்கப்பட்டது.

“என்னைப் பொருத்தவரை, நம்பிக்கைக் கூட்டணி இப்போது இருப்பதைப் போல, பிகேஆர், ஜசெக மற்றும் அமானாவுடன் நிலைக்கும்”

#TamilSchoolmychoice

“பெர்சாத்து சில வாரங்களுக்கு முன்பு வெளியேற முடிவு செய்தது.” என்று அன்வார் கூறினார்.

மேலும், இக்கூட்டணியின் தலைவராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட் இனி நம்பிக்கைக் கூட்டணி உறுப்பினராக இருக்க மாட்டார் என்று அவர் கூறினார்.

“இன்றைய நிலைப்பாட்டின் படி, அவர் (துன் ) நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்பினர் அல்ல,” என்று அவர் கூறினார்.