கோலாலம்பூர்: புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை நியாமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாக அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.
அம்னோ அதிகபடியான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கையில் இந்த அமைப்பு நியாயமற்றது என்று அவர் கூறினார்.
பிரதமர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அம்னோ உறுப்பினர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படாத அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“இந்த நிலைமை அம்னோவால் பங்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு கிடைத்த அனுபவத்தின் நிலைக்கு ஏற்ப இல்லை.”
“இரண்டாவதாக, அமைச்சரவை பிபிபிஎம் மற்றும் அஸ்மின் அலி முகாமுக்கு தெளிவாக வாய்ப்பளித்துள்ளது,” என்று அவர் முகநூல் வழியாக தெரிவித்தார்.