Home One Line P2 “வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்ல”- ரஜினிகாந்தை குறி வைக்கும் விளம்பரம்!

“வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்ல”- ரஜினிகாந்தை குறி வைக்கும் விளம்பரம்!

674
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசம் குறித்து அண்மையில் அறிவித்ததை அடுத்து பல்வேறு கருத்துகள் அவரை ஆதரித்தும் எதிர்த்தும் வெளியிடப்பட்டன.

இதற்கிடையே, இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் வீரபாகு, மாளவிகா நாயர், ரோபோ ஷங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

முழு நீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்துக்குப் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனம் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ரோபோ சங்கர் அரசியல்வாதியாக கைகளைக் கூப்பி வணங்கும் அப்படத்தில், “வருவது உறுதி, வந்துட்டே இருக்கேன், வந்துட்டேன் ஆனா நான் இல்ல” என்ற வசனங்கள் உள்ளன.

இது நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நுழைவைக் குறிப்பிடுவது போல் இருப்பதாகக் கூறப்படுகிறது. சிலர் இதனை எதிர்த்தும், பலர் இதனை நகைப்புக்குரிய விசயமாகவே சமூகப்பக்கங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.