Home One Line P2 அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு மகிழும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு மகிழும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

779
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வழியாக COVID-19 pandemic தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாடே சவாலான காலக்கட்டத்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், ​​மலேசியர்களுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கு சேவைகளை வழங்குவதன் மூலம் ஆஸ்ட்ரோவும் இவ்வேளையில் முக்கிய பங்காற்ற உறுதிபூண்டுள்ளது.

மார்ச் 18, புதன்கிழமை காலை மணி 06:00  முதல், அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் ஆஸ்ட்ரோ மற்றும் ஆஸ்ட்ரோ கோ வாயிலாக அனைத்து திரைப்பட அலைவரிசைகளையும் இலவசமாக கண்டு மகிழலாம். HBO, FOX Movies, Celestial Movies, tvN Movies, BollyOne மற்றும் பலதரப்படட அலைவரிசைகள் அவற்றுள் அடங்கும். திரைப்பட பிரியர்கள் HBO இல் “Westworld”-இன் புதிய சீசனை கண்டு மகிழ்வதோடு, புளோக் பார்ஸ்டர் ஹிட் திரைப்படங்களான ““Avengers: End Game” -ஐ Fox Movies அலைவரிசையிலும், “Parasite” -ஐ  tvN Movies அலைவரிசையிலும் கண்டு களிப்பதோடு மற்ற அலைவரிசைகளில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கலாம்.

அனைத்து வாடிக்கையாளர்களும் இலவசமாகக் காண இயலும் திரைப்பட அலைவரிசைகளின் பட்டியல் பின் வருமாறு:

·                     BOO

#TamilSchoolmychoice

·                     HBO

·                     Cinemax

·                     FOX Movies

·                     FOX Family Movies

·                     FOX Action Movies

·                     tvN Movies

·                     Celestial Movies

·                     Astro Citra

·                     Tayangan Hebat

·                     Thangathirai

·                     BollyOne

·                     HITS Movies

·                     Celestial Classic

Movies

உங்களுக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை Astro GO வாயிலாக எங்கும் எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள். App Store அல்லது Google Play வாயிலாக Astro GO செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். மாறாக, பயனீட்டாளர்கள் Astro GO செயலியை astrogo.astro.com.my  அகப்பக்கத்தின் வாயிலாகவும் அணுகலாம்.

NJOI வாடிக்கையாளர்களுக்கு KIX மற்றும் Nat Geo WILD எனும் மேலும் இரு அலைவரிசைகள் இலவசமாக வழங்கப்படும். இவ்வலைவரிசைகளை இலவசமாக காணும் வாய்ப்பு செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020 இரவு  11:59 மணிக்கு முடிவடையும்.

இந்த இலவச முன்னோட்டத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு,  www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.