Home One Line P2 இந்தோனிசியா: 80-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ள இருந்த மத நிகழ்ச்சி இரத்து!

இந்தோனிசியா: 80-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் கலந்து கொள்ள இருந்த மத நிகழ்ச்சி இரத்து!

731
0
SHARE
Ad

ஜகார்த்தா: இந்தோனிசியாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள இருந்த இஸ்லாமிய நிகழ்ச்சியில் மலேசியர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்பப்பட்டது.

ஆயினும், தற்போது அந்நிகழ்ச்சியை இரத்து செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமலாக்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொவிட்-19 பாதிப்பு தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு எடுத்துக் கூறப்பட்டதாகவும், இம்மாதிரியான கூட்டம் கூடுதல் நிகழ்ச்சிகள் ஆபத்தை விளைவிக்கு என்று அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கோவா மாவட்டத் தலைவர், அட்னான் புரிச்தா இச்சான் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மலேசியர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான தடையை தூதரகம் வெளியிட்டிருந்தாலும், அவர்கள் அங்கு கூட இருந்ததாக நம்பப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

“இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மலேசியர்களின் எண்ணிக்கையை கண்டறிய முடியவில்லை . ஆனால் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிக்கிறோம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

மொத்தம் 83 மலேசியர்கள் சுலாவேசியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்ததாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.