கோலாலம்பூர்: கொவிட் -19 பாதிப்பு குறைக்கப்படாவிட்டால், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை அரசாங்கம் நிராகரிக்கவில்லை.
இந்த தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க வீட்டிலேயே தங்கியிருப்பதன் முக்கியத்துவதைப் பற்றி நேற்று புதன்கிழமை மீண்டும் பிரதமர் மொகிதின் யாசின் நினைவுபடுத்தினார்.
“கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க, தொற்று சங்கிலியை உடைக்க விரும்புகிறோம்.”
“கொவிட் -19, உயிர் பெற்று வளர்வதற்கு இரண்டு வாரங்கள் உள்ளது. இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அறிகுறிகள் உள்ளவர்கள் வெற்றிகரமாக சிகிச்சைக்காக விலக்கப்படுவர். இதனால் மலேசியாவை கொவிட் -19-லிருந்து விடுவிக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.”
“இந்த காலக்கட்டத்தில் நாம் வெற்றிபெறவில்லை என்றால், அரசாங்கம் கட்டுப்பாட்டு காலத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும்” என்று அவர் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் கூறினார்.
எனவே, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் நோக்கத்தை பிரதமர் மீண்டும் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.
“மக்கள் வெளியே சுற்றிக்கொண்டிருந்தால், தொடர்பு கொள்ள வாய்ப்பு அதிகம்.”
” நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதால், அவர்கள் கொவிட் -19 கிருமியைக் கொண்டு செல்லக்கூடிய நண்பர்களுடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.”
“ஆனால், உங்களுக்குத் தெரிந்தவர்கள் இன்னும் சுற்றிக்கொண்டிருந்தால், மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், தொற்றுநோயைப் பெறுவதற்கும் வாய்ப்பு அதிகம்” என்று அவர் மேலும் கூறினார்.