கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி நிலவரப்படி 110 கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ள நிலையில், மொத்த சம்பவங்கள் 900-ஆக உயர்ந்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, 63 சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த கூட்டம் தொடர்பானவை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, 15 பேர் இந்த நோயிலிருந்து விடுபட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 75 பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 16-ஆம் தேதியன்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அறிவித்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் கூட்டரசுப் பிரதேசங்களும் தொற்றுநோய்களின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பகுதிகளாக வர்த்தமானி வெளியிடப்பட்டது.