Home இந்தியா தெலுங்கு-கன்னட மொழி மக்களுக்கு ஜெயலலிதா யுகாதி தின வாழ்த்து

தெலுங்கு-கன்னட மொழி மக்களுக்கு ஜெயலலிதா யுகாதி தின வாழ்த்து

800
0
SHARE
Ad

jeyalalithaசென்னை, ஏப். 10- முதலமைச்சர் ஜெயலலிதா யுகாதி தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாளில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் மொழியால் வேறுபட்டு இருந்தாலும், தமிழ் மக்களின் உணர்வுகளுடன் இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் வாழ்ந்து வரும் பாங்கு, மொழியால் வேறுபட்டோரும் அன்போடும், பண்போடும் வாழ தமிழகம் வழி வகுத்துள்ளது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

#TamilSchoolmychoice

தமிழ் மக்களோடு நல்லுறவைப் பேணி இனிதே வாழ்ந்து வரும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், இப்புத்தாண்டில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி, எனது இனிய யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.