Home One Line P2 கொவிட்-19 : இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

கொவிட்-19 : இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை

689
0
SHARE
Ad

புதுடில்லி – உலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு முடிவுகளை எடுத்து வரும் நாடுகளின் வரிசையில் இன்று இந்தியாவும் இணைந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நள்ளிரவு தொடங்கி அடுத்த 21 நாட்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

கொவிட்-19 போராட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் மோடி அறிவித்தார்.

கொவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு அடுத்த 21 நாட்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் மோடி மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.