Home One Line P1 கொவிட்-19: நாட்டில் மரண எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது!

கொவிட்-19: நாட்டில் மரண எண்ணிக்கை 16-ஆக உயர்ந்தது!

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பின் காரணமாக நாட்டில் மேலும் ஒரு மரணம் பதிவாகி உள்ளது.

இதுவரையிலும் கொவிட்-19 காரணமாக நாட்டில் மரணமுற்றோரின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை, இரவு 7:40 மணிக்கு மரணமடைந்த 75 வயது மலேசியர் நீண்ட நாட்களாக நோயில் இருந்ததாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

கடந்த மார்ச் 16-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்க்கு முன்னதாக அவர், இந்நோய்க்கான அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும், மார்ச் 18-ஆம் தேதி அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உடல் நிலை மோசமான நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கொவிட்-19 நோய்த்தொற்று அவருக்கு ஏற்பட்டதன் காரணத்தை சுகாதாரத் துறை விசாரித்து வருவதாக அவர் தமது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார்.