கோலாலம்பூர்: இந்தியாவில் சிக்கித் தவித்த 1,119 மலேசியர்கள் நாடு திரும்பி உள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ காமாருடின் ஜாபார் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை (மார்ச் 25) வரை மொத்தம் 1,679 மலேசியர்கள் இந்தியாவில் இன்னும் சிக்கித் தவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அனைத்து மலேசியர்களும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, தமிழகத்திலிருந்து இன்று காலை 558 மலேசியர்கள் நாடு திரும்பியதாக டி செண்ட்ரல் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை நாட்டிற்கு கொண்டு வரும் செலவுகளை மஇகா ஏற்பதாகக் கூறியிருந்த நிலையில், தற்போது அது தீவிரமாக இந்தியாவில் சிக்கிக் கொண்டவர்களை மலேசியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளது.