Home 13வது பொதுத் தேர்தல் ஃபொங் பொ குவான் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை!

ஃபொங் பொ குவான் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவில்லை!

517
0
SHARE
Ad

poh-kuavan-feaஈப்போ, ஏப்ரல் 10- பேராக், பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியையும்  ஜசெக கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஃபொங் பொ குவான் அவருடைய தனிப்பட்ட காரணத்தால் 13ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், தனது முடிவை பற்றி ஜசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங்கிடமும், ஜசெக கட்சி தலைவர் கர்பால் சிங்கிடமும் கடிதம் மூலம்  எழுதி தெரிவித்ததாக கடந்த புதன்கிழமையன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார்.

இம்முறை தேர்தலில் புத்ரா ஜெயாவை கைப்பற்ற பல முயற்சிகளைக் கையாண்டு வரும் மக்கள் கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவும் பங்களிப்பும் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“இது எனது சொந்த விஷயம். அதேசமயம் என்னை நாடாளுமன்ற தொகுதியில் பிரதிநிதிப்படுத்திய எனது அரசியல் நண்பர்களுக்கும் கட்சி நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஃபொங் 24,627 வாக்குகள் பெரும்பான்மையில் பத்து காஜா தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்.

அவருடன் தேர்தலில் போட்டியிட்ட தேசிய முன்னணியின் மசீச கட்சியைச் சார்ந்த சியா யோக் கேனுடன் 39,922 வாக்குகள் கூடுதலாக பெற்று பத்து காஜா தொகுதியை கைப்பற்றினார்.

இம்முறை பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் 87, 747 வாக்காளர்கள் இருக்கின்றனர். அவர்களில் சீன வாக்காளர்கள் 74 சதவீதமும், இந்திய வாக்காளர்களும்  15 சதவீதமும் குறைந்த எண்ணிக்கையில் மலாய் வாக்காளர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.