Home One Line P1 கொவிட்-19 நிதிக்காக இதுவரையிலும் 19.52 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது!

கொவிட்-19 நிதிக்காக இதுவரையிலும் 19.52 மில்லியன் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது!

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று கொவிட்-19 நிதிக்காக பல நிறுவனங்களிடமிருந்து 4.6 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பங்களிப்புகளைப் பெற்றார்.

இதுவரையில் சேகரிக்கப்பட்ட மொத்தத் தொகையானது 19.52 மில்லியனாகும்.

#TamilSchoolmychoice

பெரோடுவா ஹொல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிருவாக அதிகாரியான டத்தோ சைனால் அபிடின் அகமட் 2 மில்லியன் ரிங்கிட் பங்களிப்பை பிரதமரின் ஒப்படைத்தார்.

சாபுரா நிறுவனத்தின் நிருவாக இயக்குநரும் தலைமை நிருவாக அதிகாரியுமான டான்ஸ்ரீ ஷாரில் ஷம்சுடின் 1 மில்லியன் ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார்.
இதனிடையே, ஆர்எச்பி பேங்க் குழுவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ கைருசாலே ராம்லி அக்குழுமம் சார்பாக 1 மில்லியனை நன்கொடையாக வழங்கினார்.

குவாங் வா யித் போ பிரஸ் பெர்ஹாட் 600,000 ரிங்கிட் நிதியை வழங்கியது. அதனை அதன் உதவி தலைமை ஆசிரியர் ஜிம்மி எங் வழங்கினார்.

99 ஸ்பிட்மார்ட் மளிகைக் கடை நிறுவனம் சுமார் 1 மில்லியன் ரிங்கிட்டை வழங்கியது.

மா சிங் குழுவின் நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ லியோங் ஹோய் கும் 3.9 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 20 செயற்கை உயிர்ப்பு அமைப்புகளை பிரதமரிடம் இன்று வழங்கினார்.