Home One Line P1 கொவிட்-19: மெனாரா சிட்டி குடியிருப்பில் 18 பேருக்கு பாதிப்பு!

கொவிட்-19: மெனாரா சிட்டி குடியிருப்பில் 18 பேருக்கு பாதிப்பு!

543
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மெனாரா சிட்டி ஒன்னில் கொவிட்-19 பாதிப்புக்கு உட்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 18- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சின் இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியன்று அரசாங்கம் இப்பகுதியில் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை பிறப்பித்தது.

#TamilSchoolmychoice

அங்கு வசிக்கும் 17 பேர் கொவிட் -19 நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக பரிசோதனை முடிவுகள் கொண்டிருந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்பகுதியில், பல குடியிருப்பாளர்கள், குறிப்பாக வெளிநாட்டினர் இன்னமும் அரிசி மற்றும் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை வாங்குவதற்கு வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று அறியப்படுகிறது.

ஏப்ரல் 13 வரை, உணவு விநியோக சேவை ஊழியர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்லவோ வெளியேறவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பதினெட்டாவது நபருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அக்குடியிருப்பில் உள்ள மக்கள் அரசாங்கத்தின் ஆணைக்கு உட்பட்டு நடக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.