Home அரசியல் தேசிய முன்னணியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நஜிப் இன்று சந்தித்தார்

தேசிய முன்னணியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை நஜிப் இன்று சந்தித்தார்

491
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஏப்ரல் 10- 13ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று அனைவரும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் மற்றும் வாக்களிப்பு தேதிகளை கவனித்துக் கொண்டிருந்த வேளையில், தேசிய முன்னணியின் தலைவராகிய டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் புத்ரா அனைத்துல வாணிப மையத்தில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேர்தலுக்கான விளக்கமளித்தார்.

இந்த கூட்டம் நடத்தப்படுவதற்கான காரணம் என்னவென்றால், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒற்றுமையை வலியுறுத்துவதும் தேசிய முன்னணி வெற்றியை உறுதி செய்வதும் ஆகும்.

இக்கூட்டத்திற்கு பத்திரிக்கை நிருபர்கள் கலந்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

“நாங்கள் இங்கு ஒன்று கூடுவதற்கு இதுதான் அதற்கு முக்கிய காரணம்” என்று பத்திரிக்கை ஊடகங்களுக்கு நஜிப் இன்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் சில தினங்களில் தேசிய முன்னணி சின்னத்தின்  கீழ் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தேசிய முன்னணிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் பலரை  வேட்பாளர்களாக நிறுத்த     தான் முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.