Home One Line P2 கொவிட்-19 குறும்படத்திற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – அமிதாப் பச்சன்

கொவிட்-19 குறும்படத்திற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – அமிதாப் பச்சன்

689
0
SHARE
Ad

மும்பை – இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலும் அவரே “என்னைவிட இவர்தான் பெரியவர்” என மரியாதை வழங்கும் மற்றொரு உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன்.

அமிதாப் இந்திப் படவுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகின் வளரும் நட்சத்திரமாக இருந்த ரஜினிகாந்த், சில இந்திப் படங்களிலும் நடித்தார். அந்த வகையில் அமிதாப்புடன் அவர் இணைந்து நடித்த இந்திப் படம் “அந்தா கானுன்”.

#TamilSchoolmychoice

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இப்போது 29 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் – ஆனால் திரைப்படத்தில் அல்ல!

ரஜினி – அமிதாப் – அன்று இணைந்து நடித்தபோது…

கொவிட்-19 உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அது குறித்து எடுக்கப்படும் விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

“குடும்பம்” (Family) என்ற தலைப்பிலான அந்தக் குறும்படத்தில் அமிதாப், ரஜினி தவிர சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், அலியா பட், போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்தக் குறும்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குடும்ப பாதுகாப்பு, சுகாதாரம், இல்லத்திலிருந்தே பணியாற்றுவது, ஊரடங்கு காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய சமூக இடைவெளி, போன்ற அம்சங்கள் குறித்து இந்த குறும்படம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசூன் பாண்டே என்பவர் இந்தக் குறும்படத்தை இயக்கியுள்ளார்.