Home One Line P2 மும்பை ஒரே மருத்துவமனையில் 26 தாதிகள், 3 மருத்துவர்களுக்கு கொவிட்-19 தொற்று

மும்பை ஒரே மருத்துவமனையில் 26 தாதிகள், 3 மருத்துவர்களுக்கு கொவிட்-19 தொற்று

712
0
SHARE
Ad

மும்பை – இந்தியா முழுவதும் இதுவரையில் 4,281 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கும் வேளையில் மரண எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக மும்பை வோக்ஹார்ட் (Wockhardt) மருத்துவமனையில் 26 தாதிகளுக்கும் 3 மருத்துவர்களுக்கும் ஒரே வாரத்திற்குள் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை முழுவதும் மூடப்பட்டு, அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டு அங்கு யாருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை அந்த மருத்துவமனை மூடப்பட்டிருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கிடையில் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் தொடர்புடைய 25,500-க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.