வாஷிங்டன்: கொவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக நியூயார்க்கில் மரணமுற்றவர்களின் நல்லுடல்கள் நியூயார்க் பொது பூங்காக்களில் புதைக்கப்படலாம்.
அம்மாநிலத்தில் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கையைத் தொடர்ந்து, அங்கு அடக்கம் செய்ய இடமில்லை என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.
மன்ஹாட்டன் ஊராட்சி உறுப்பினர் மார்க் லெவின் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 130,000 நியூயார்க்கர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டதாகக் கூறினார். அவர்களில் 16,000 பேர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றுவரை, நியூயார்க்கில் மொத்தம் 4,758 இறப்புகள் பதிவாகியுள்ளன.
கொவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்வதில் இப்பகுதி ஒரு தற்காலிக நடவடிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக லெவின் அறிவித்தார்.
“இறந்த உடல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று லெவின் ஒரு டுவிட்டர் அறிக்கையில் திங்களன்று தெரிவித்தார்.
“மன்ஹாட்டன் மற்றும் புரூக்ளினில் உள்ள தலைமை பிணக்கிடங்குகள் விரைவில் நிரம்பும்.”
“அடுத்து என்ன செய்வது?”
“மிக விரைவில், நாம் இந்த தற்காலிக அடக்கம் செய்யும் பணியைத் தொடங்குவோம். நியூயார்க்கில் உள்ள ஒரு தோட்டத்தில் செய்யப்படலாம். ஒரு வரிசையில் 10 சவப்பெட்டிகளைக் கொண்ட நீண்ட புதைகுழி தோண்டப்படும்.”
கொவிட்-19 காரணமாக அமெரிகாவில் 10,000- க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகி உள்ளன.