கோலாலம்பூர்: கூச்சிங்கில் உள்ள ஒரு தேவாலய நிகழ்ச்சி, மற்றும் சிலாங்கூர் பாங்கியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட கொவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை வியத்தகு அதிகரிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
பிப்ரவரி 27 முதல் மார்ச் 1-ஆம் தேதியன்று கோலாலம்பூரில் ஸ்ரீ பெட்டாலிங் மசூதியில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் இந்த தொற்றுநோயுடன் இணைக்கப்பட்டவை.
இரண்டு இறப்புகளுடன், கூச்சிங் தேவாலய நிகழ்ச்சியில் 83 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டன. பாங்கி திருமணத்தில் 88 நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன.
மார்ச் பிற்பகுதி வரை 62 விழுக்காடு சம்பவங்கள் ஸ்ரீ பெட்டாலிங் நிகழ்ச்சியிலிருந்து வந்தவை என்று நூர் ஹிஷாம் முன்பு கூறியிருந்தார். சுமார் 1,000 சம்பவங்கள் கொவிட்-19 நோய்க்கு நேர்மறையான முடிவுகளைத் தந்தன.
“இதுவரை, இந்த நிகழ்ச்சியிலிருந்து (தேவாலயம்) கொவிட் -19- க்கு 83 பேர் நேர்மறையான முடிவுகளைக் கொண்டுள்ளனர். இதில் இரண்டு இறப்புகள், ஐந்து பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒருவர் முழுமையாக குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார்”என்று அவர் கூறினார்.
பாங்கி திருமண நிகழ்ச்சி ஐந்தாவது தலைமுறை நோய்த்தொற்றாக வளர்ந்துள்ளதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
“ஏப்ரல் 6, நிலவரப்படி, இந்த திருமணத்திலிருந்து 88 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்களில் எந்த இறப்பும் இணைக்கப்படவில்லை. ”
இந்த இரண்டு முக்கிய நிகழ்ச்சிகளும் ஐந்தாவது தலைமுறை கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உள்ளடக்கியதாக அவர் கூறினார்.