Home One Line P2 கொவிட்-19:  மருந்துகளுக்காக மோடிக்கு நன்றி சொன்ன டிரம்ப்

கொவிட்-19:  மருந்துகளுக்காக மோடிக்கு நன்றி சொன்ன டிரம்ப்

651
0
SHARE
Ad

வாஷிங்டன் – “ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்” என்பார்கள். அந்த நிலைமைதான் இன்றைக்கு அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும்!

எல்லா விவகாரங்களிலும் அமெரிக்காவின் கரங்களையும், கடைக்கண்  பார்வையையும் எப்போதும் எதிர்பார்த்து இந்தியா இருந்த நிலைமை மாறி, கொவிட்-19 பாதிப்புகளால் அதிகரித்து வரும் மரணங்களால் தங்களுக்குத் தேவைப்பட்ட முக்கிய மருந்துகளைப் பெற இந்தியாவின் உதவியை நாடியிருக்கிறது அமெரிக்கா.

#TamilSchoolmychoice

கொவிட்-19 எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு 2.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்துதவிய அமெரிக்கா, அடுத்த ஓரிரு நாட்களிலேயே தனக்கு மருந்துத் தட்டுப்பாடு என்றதும் அதே இந்தியாவின் உதவியைத்தான் நாட வேண்டியிருந்தது.

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் (hydroxychloroquine) என்ற அந்தக் குறிப்பிட்ட மருந்தை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியாது என்ற கட்டுப்பாட்டை மோடியும் உடனடியாகத் தளர்த்தி அந்த மருந்துகளை அனுப்பி வைத்திருக்கிறார்.

அதற்காக டொனால்ட் டிரம்ப் தனது நன்றியை மோடிக்குத் தெரிவித்திருக்கிறார்.

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் என்ற மருந்து மலேரியா நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்தாகும். இந்த மருந்து, மற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளோடு சேர்த்துத் தரப்படும்போது கொவிட்-19 நோயாளிகளுக்கும் சிறந்த முறையில் பயனளிக்கிறது.

எனினும் பல நாடுகளில் மலேரியா ஒழிக்கப்பட்டுவிட்டதால், இந்த மருந்து அத்தகைய நாடுகளில் அதிகமாகத் தயாரிக்கப்படுவதில்லை. இப்போது அந்த மருந்து, கொவிட்-19 பாதிப்புகளால் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது.