Home One Line P1 கொவிட்-19: செல்லப்பிராணிகளின் நலனுக்காக பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்!

கொவிட்-19: செல்லப்பிராணிகளின் நலனுக்காக பாதிப்புக்குள்ளானவர்கள் அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்!

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பைக் கொண்டுள்ள நபர்கள் தங்களின் செல்லப்பிராணிகளை சுகாதார கண்காணிப்பு நோக்கங்களுக்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று புத்ரா பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீடத்தின் மூத்த விரிவுரையாளர் (கால்நடை நோய்த்தடுப்பு) மற்றும் செல்லப்பிராணி நோய் ஆய்வாளர் டாக்டர் பாரினா முஸ்தபா காமால் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் விலங்குகள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளைக் காட்டினால், பராமரிப்பாளர் மாவட்ட கால்நடை சேவைகள் துறையை அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

செல்லப்பிராணிகளின் மூலம் கொவிட்-19 நோய்த்தொற்று பரவுவது குறித்த எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், அவை பாதிக்கப்படலாம் என்று உலக விலங்குகள் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பெல்ஜியம் மற்றும் ஹாங்காங்கில் செல்லப்பிராணிகள், பூனைகள் மற்றும் நாய்கள் சம்பந்தப்பட்ட இரண்டு கொவிட் -19 நோய்த்தொற்றுகள் தங்கள் உரிமையாளர்களிடம் இருந்து தொற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“எனவே, கொவிட்-19 நேர்மறை நபர்கள் கைகளை கழுவாமல், முத்தமிடுதல், கட்டிப்பிடிப்பது அல்லது விளையாடுவது மூலம் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது,” என்று பெர்னாமாவை தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.