கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) வரை மலேசியாவில் கொவிட்-19 பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 4,346- ஆக உயர்ந்துள்ளது.
புதியதாக 118 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று மூவர் மரணமடைந்ததை அடுத்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 70-ஆக அதிகரித்திருக்கிறது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இன்றைய 69 நிலையில் பேர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 40 பேர்கள் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இன்று 222 பேர் சிகிச்சையிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,830-ஆக உயர்ந்திருக்கிறது.
Comments