Home அரசியல் கையெழுத்திட்டால் மட்டும் போதாது; ஊழலுக்கு எதிராகப் போராடுங்கள் – நஜிப்புக்கு லிம் குவான் கோரிக்கை

கையெழுத்திட்டால் மட்டும் போதாது; ஊழலுக்கு எதிராகப் போராடுங்கள் – நஜிப்புக்கு லிம் குவான் கோரிக்கை

526
0
SHARE
Ad

Lim-Guan-Eng-2பினாங்கு, ஏப்ரல் 10 – நாட்டில் நடக்கும் ஊழல்களுக்கு எதிராக பிரதமர் நஜிப் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவர் தேர்தலை உண்மையான நடத்துவேன் என்று வாக்குறுதிகளில் கையெழுத்திடுவது அர்த்தமற்றது என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

மேலும், நஜிப் மற்றும் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது சொத்து விவரங்களை பொதுமக்கள் முன்னிலையில்  கணக்கு காட்ட வேண்டும், அத்துடன் தற்போது தேசிய முன்னணி பராமரிப்பு அரசாங்கமாக செயல்படுவதால், அரசுக்குச் சொந்தமான வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து லிம் மேலும் கூறுகையில், சரவாக் முதலமைச்சர் தாயிப்பின் ஊழல் விவகாரத்தில், பிரதமர் நஜிப் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே தாயிப் கூறுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு 47 மற்றும் 48 ஆகிய சட்டப்பிரிவுகளின் படி, இதுபோன்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தராத நபர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக 10,000 ரிங்கிட் அல்லது இரண்டு வருட சிறை தண்டனை தரப்படவேண்டும் என்று லிம் தெரிவித்துள்ளார்.