கோலாலம்பூர்: பள்ளி திறக்கப்படுவது தாமதமாகலாம் என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஏப்ரல் 28 வரை தொடரும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்த நேரடி ஒளிபரப்பின் போது அவர் இவ்வாறு கூறினார்.
“பள்ளி விரைவில் திறக்கப்படாமல் போகலாம். நிலவரம் மேம்பட்டுள்ளன என்பது நமக்குத் தெரியும் வரை பள்ளி அமர்வை ஒத்திவைக்க வேண்டியிருக்கும்.”
“இதற்கிடையில், நம் குழந்தைகள் வீட்டில் படிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறையில் இருக்கும் வரை மற்றும் பள்ளி மீண்டும் திறக்கப்படும் வரை, வீட்டுப் படிப்பை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டதாக பிரதமர் கூறினார்.