Home அரசியல் பொறுப்புள்ள மூத்த தலைவராக மகாதீர் நடந்து கொள்ள வேண்டும் – லிம் கிட் சியாங்

பொறுப்புள்ள மூத்த தலைவராக மகாதீர் நடந்து கொள்ள வேண்டும் – லிம் கிட் சியாங்

599
0
SHARE
Ad

Lim-Kit-Siang-Slider---2கோலாலம்பூர், ஏப்ரல் 11- அதிக காலம் பிரதமர் பதவியை வகித்த துன் மகாதீர் பொறுப்புள்ள ஓர் அரசியல் தலைவராக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜ.செ.க. மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.

தற்போது மகாதீரின் அதிகமான சுறுசுறுப்பினாலும், இனத் துவேஷக் கருத்துகளினாலும் வெறுப்படைந்துள்ள பல மூத்த தலைவர்களில் ஒருவரான லிம், 22 ஆண்டு கால பிரதமர் பதவிக்காலம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் விவாதத்தில் பங்கேற்குமாறு  மகாதீருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மகாதீருடன் 7 முக்கிய அம்சங்கள் குறித்து விவாதம் நடத்தவிருப்பதாக லிம் தெரிவித்துள்ளார்.  அவரின் 22 ஆட்சிக்காலத்தில் நடந்த பெரும் நிதி முறைக்கேடுகள், நீதித்துறை, காவல்துறை, அரசாங்கச் சேவை ஆகிய தேசிய அமைப்புகளுடைய சுதந்திரம் கீழறுப்பு குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் நஜிப்பின் ஆட்சி காலம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள லிம், காரணம், அம்னோவின் நடப்பு தலைவர் நஜிப்பை விட அம்னோவில் மிகவும் ஆற்றல் வாய்ந்தவராக மகாதீர்  இருந்து வருவது கடந்த 100 நாட்களில் அறிய முடிவதாக கூறினார்.

இன வெறுப்பையும் இன உணர்வுகளையும் தூண்டும் அறிக்கைகளையும் அவர் வெளியிடக்கூடாது என்று லிம் வலியுறுத்தினார். அவரின் அறிக்கையினால் பொதுத்தேர்தல் இரட்டை பொது வாக்கெடுப்பாக மாறிவிட்டதாகவும் லிம் கிட் சியாங் குறிப்பிட்டார்.

மகாதீரின் 2020 தூர நோக்கு லட்சியத் திட்டத்திற்கு அவரின் அறிக்கைகள் முரண்பாடாக  இருப்பதோடு, மூத்த அரசியல் தலைவராக அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று லிம் கிட் சியாங் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.