கோலாலம்பூர், ஏப்ரல் 11 – எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில், தித்திவாங்சா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணிக்கும், பாஸ் கட்சிக்குமிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் கடந்த 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், தித்திவாங்சா நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் ‘லோ லோ’ என்று அழைக்கப்படும் முகமத் காசாலி, கடந்த 2011 ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிப் பணிகள் அனைத்தையும் தித்தி வாங்சா பாஸ் கட்சி துணை ஆணையர் மற்றும் பாஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அகமத் சாம்ரி ஆசாத் குஸைமி ஆகியோர் கவனித்து வந்தனர்.
இந்நிலையில்,வரும் பொதுத்தேர்தலில் தித்திவாங்சா தொகுதியில் பாஸ் கட்சி சார்பாக அகமத் சாம்ரி (படம்) போட்டியிடுவார் என்று கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி பாஸ் கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி ஆவாங் அறிவித்தார்.
எனவே, தித்திவாங்சா தொகுதியின் அம்னோ தலைவர் டத்தோ ஜோகாரி அப்துல் கானி, அகமத் சாம்ரியை எதிர்த்து களமிறங்குவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த 2010 ஆம் ஆண்டு தித்தி வாங்சா தொகுதியில் அம்னோ தலைவராக இருந்த டத்தோ ஸ்ரீ டாக்டர் சுலைமான் முகமத் பதவி விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக ஜோகாரி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஜோகாரி கூறுகையில், “தித்திவாங்சா தொகுதி வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு மிகவும் பரீட்சயமான மற்றும் இத்தொகுதியிலுள்ள பிரச்சனைகளைப் பற்றி நன்கு அறிந்த வேட்பாளரையே விரும்புகின்றனர். இதே தொகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் நான், இங்குள்ள பிரச்சனைகள் குறித்து நன்கு அறிவேன்.
எனவே இம்முறை தேசிய முன்னணி கடந்த தேர்தலில் பாஸ் கட்சியிடம் இழந்த தித்திவாங்சா தொகுதியை மீண்டும் கைப்பற்றும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தித்திவாங்சா தொகுதி தேர்தல் நிலவரம் பின்வருமாறு,