Home 13வது பொதுத் தேர்தல் பினாங்கு பாஸ் கட்சி 6 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடும்

பினாங்கு பாஸ் கட்சி 6 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடும்

582
0
SHARE
Ad

PAS-Logo-Sliderகப்பளா பத்தாஸ், ஏப்ரல் 11- எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பினாங்கு பாஸ் கட்சியானது பினாங்கு மாநிலத்தில் 6 சட்டமன்ற தொகுதியிலும், 2 நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

நேற்றிரவு பொதுத் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கும் போது மாநில பாஸ் கட்சி ஆணையர் டத்தோ முகமட் சாலே மான் இவ்வாறு அறிவித்தார்.

அதேவேளையில், முகமட் சாலே தாம் பெர்மாதாங் பாசிர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“மாநில பாஸ் கட்சியின் இளைஞர் தலைவர்  யுஸ்னி முகமட் பியா சுங்கை ஆச்சே சட்டமன்ற தொகுதியில் போட்டியிடவுள்ளார். பெரும்பான்மையான மலாய்க்கார வாக்காளர்களின் ஆதரவை பெற முடியும் என்ற நோக்கத்தில் அவரை அத்தொகுதியில் களமிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.” என்றார்

நேற்றிரவு, பினாங்கு பிகேஆர் கட்சி தலைவர் டத்தோ மன்சோர் ஒத்மான், பிகேஆர் கட்சியின் சார்பாக ‘செக்குபார்ட்’ என்று அனைவராலும் அழைக்கப்படுகின்ற இசாம் ஷாஅரின் சுங்கை ஆச்சே தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

எனவே, சுங்கை ஆச்சே தொகுதியில் போட்டியிடப் போவது பிகேஆர் கட்சியா அல்லது பாஸ் கட்சியா என்ற குழப்பம் தற்போது நிலவுகின்றது.

நான்கு சட்டமன்ற தொகுதிகளான, பெனாகா தொகுதியில்  ரொஷிடி உசேன், பெர்மதாங் பெரங்கான் தொகுதியில் அர்ஷாட் முகம்ட் சல்லே, சுங்கை டுவா தொகுதியில் சஹாடி முகமட் மர்றும் பாயான் லெப்பாஸ் தொகுதியில் அஸ்னா ஹஷிம் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

மேலும், இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளான கப்பளா பத்தாஸ், தாசேக் குளுகோர்  தொகுதிகளில் முறையே அஸ்னான் ஹமிமி தாய்ப் அசாமுடின் மற்றும் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மைடின் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.