Home இந்தியா வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுங்கள்

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுங்கள்

936
0
SHARE
Ad

advaniபுதுடெல்லி, ஏப்ரல் 11- ‘வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பாஜ மூத்த தலைவர் அத்வானி வலியுறுத்தி உள்ளார்.

இது பற்றி தனது இணையதள பிளாக்கில் அவர் எழுதி இருப்பதாவது:-

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

பிரணாப் முகர்ஜி இப்போது நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருக்கிறார். கருப்பு பணத்தை மீட்க அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறியுள்ளார்.