Home One Line P1 1எம்டிபி: 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அரசாங்கத்திடம் திருப்பித் தரப்பட்டது!

1எம்டிபி: 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் அரசாங்கத்திடம் திருப்பித் தரப்பட்டது!

496
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்கா, அரசாங்கத்திடம் திருப்பி தந்துள்ளதாக மலேசியா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அமெரிக்க நீதித் துறையின் முயற்சியின் மூலம் இந்நிதி பெறப்பட்டதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.

#TamilSchoolmychoice

“2019-ஆம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதியன்று, மலேசியாவிலிருந்து தப்பியோடிய ஜோ லோ, 1 எம்டிபி பணத்தைப் பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களுக்கு எதிராக அமெரிக்க நீதித் துறை தாக்கல் செய்த ஏராளமான பறிமுதல் கோரிக்கைகள் தொடர்பில் அத்துறையுடன் ஒரு தீர்வை எட்டியிருந்தார்.”

“300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் விற்கப்பட்ட சில சொத்துக்களை குறிக்கிறது. 1எம்டிபியுடன் இணைக்கப்பட்ட சொத்துக்களின் வருமானமும் இதில் அடங்கும். ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன், 1எம்டிபி சம்பந்தப்பட்ட மொத்தம் 620 மில்லியன் அமெரிக்க டாலர் பணம், விற்பனை வருமானம் அல்லது சொத்துக்களின் வடிவத்தில் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.