Home One Line P1 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது! – அன்வார்

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் தலைமையிலான புதிய கூட்டணி நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியப் பிறகு, முதல் முறையாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

அவர்களின் இந்த சந்திப்பு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் 45 நிமிடங்கள் நடந்தது.

#TamilSchoolmychoice

சந்திப்பின் போது, ​​மொகிதின் கொவிட் -19 தொற்றுநோய் தொடர்பான பிரச்சனைகளை எழுப்பினார் என்றும், மேலும் மே 18 அன்று நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தொடங்க முன்மொழிந்தார் என்றும் அன்வார் கூறினார்.

“நம்பிக்கைக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள எனது நண்பர்களுடன் மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவேன். அவரிடம் (மொகிதின்) கருத்துக்களை தெரிவிப்பேன்” என்று அன்வார் ஒரு முகநூல் பதிவில் தெரிவித்தார்.

முன்னதாக முகநூலில் செய்தியாளர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமருடனான இந்த சந்திப்பு நடந்தது. அடுத்து நடக்க இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்படாது என்று அன்வார் உறுதியளித்தார்.

மொகிதினுடனான சந்திப்பின் போது, ​​பிரதமர் கொவிட் -19 பாதிப்பைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விளக்கியதாக அன்வார் தெரிவித்தார். அதே நேரத்தில் அரசாங்கம், அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமூகங்கள் வழங்கும் சேவைகளுக்கு அன்வார் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“தகவல்களைப் பரப்புவது வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதையும், திரையிடலின் எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும் என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன்,” என்று அன்வார் கூறினார்.

கொவிட் -19 பாதிப்பின் காரணமாக நிதிப் பிரச்சனையில் சிக்காது இருக்க மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அரசாங்கத்தின் பொருளாதார ஊக்கத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அன்வார் கூறினார்.

“ஆனால், இது சரியாக செயல்படுகிறதா என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.  அது அடிமட்ட மட்டத்தில் அரசியல் மயமாக்கப்படக்கூடாது” என்று அவர் மேலும் கூறினார்.