கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்தை பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் இஸ்தானா நெகாராவில் இருந்தபடி காணொளி வாயிலாக கலந்துரையாடலை நடத்தினார்.
இம்மாதிரியான காணொளி கலந்துரையாடல் நடப்பது இதுவே முதல் முறை என்று அரண்மனை மேலாளர் டத்தோ அகமட் பாசில் ஷம்சுடி தெரிவித்தார்.
“சுல்தான் அப்துல்லாவும் வாராந்திர அமைச்சரவைக்கு முந்தைய கூட்டம் இக்காலக்கட்டத்தில் காணொளி கலந்துரையாடல் மூலம் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஒப்புக் கொண்டார். தற்போதைய பிரச்சனைகள் குறித்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினுடன் மாமன்னர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு இது உதவும்.”
“இது மாமன்னர் சுல்தான் அப்துல்லா நாட்டின் நிர்வாகம் மற்றும் மக்களின் நல்வாழ்வைப் பற்றிய மிகுந்த அக்கறையைக் கொண்டுள்ளார் என்பதனை பிரதிபலிக்கிறது.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய காணொளி கலந்துரையாடல் சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக அகமட் பாசில் கூறினார்.