கோலாலம்பூர் – உலகம் முழுவதும் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், மலேசியாவும் தனது எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவிருக்கிறது.
எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நாளொன்றுக்கு 136,000 பீப்பாய்கள் எண்ணெய் வீதம் மலேசியா தனது உற்பத்தியைக் குறைக்கும் என பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் முஸ்தாபா முகமட் அறிவித்துள்ளார்.
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளும் தங்களின் எண்ணெய் விநியோகத்தைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளன.
ஓபெக் மற்றும் ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 20 விழுக்காட்டைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளன.