சென்னை – கடந்த சில நாட்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலும், சுகாதார அமைச்சின் அறிக்கைகளை வாசிக்காமலும் ஒதுங்கிக் கொண்டிருந்த நிலையில் அவருக்குப் பதிலாக சுகாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் சுகாதார அமைச்சின் அறிக்கைகளை நேரடியாக தொலைக் காட்சி ஊடகங்களின் வழி வழங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இன்று புதன்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று புதிதாக 38 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்த கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 118 ஆகவும், மரணமடைந்தோரின் எண்ணிக்கை 14 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் மொத்தம் 26 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே நாளில் 5,320 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும். இந்தியாவிலேயே ஆய்வகங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தியா முழுவதும் 11,933 கொவிட்- 19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது.