Home கலை உலகம் ஆஸ்ட்ரோ வாராந்திர திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ வாராந்திர திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

476
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட்-19 பிரச்சனைகளால் அமுலாக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாக இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் இந்த வாரம் ஒளியேறவிருக்கும் சில திரைப்படங்களின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

வியாழன், 23 ஏப்ரல்

மேட் இன் சீனா (இந்திப் படம் – முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

#TamilSchoolmychoice

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராஜ்குமார் ராவ், போமன் இரானி & மௌனி ராய்

ஒரு தோல்வியுற்ற, ஆர்வமுள்ள தொழில்முனைவரான ரகுவீர் பற்றிய நகைச்சுவை கலந்த திரைப்படம் ‘மேட் இன் சீனா’. பல வணிக முயற்சிகளில் தோல்வியுற்ற போதிலும் அவர் முயற்சியைக் கைவிடாமல் புதிய வணிக வாய்ப்புகளைத் தேடி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்கிறார்.

வெள்ளி, 24 ஏப்ரல்

டாணா (தமிழ்ப் படம் – முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி. (அலைவரிசை 241), 9pm | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யோகி பாபு, நந்திதா ஸ்வேதா & வைபவ் ரெட்டி

காதல், நகைச்சுவை அம்சங்களைக் கொண்ட இத்திரைப்படம் விசித்திரமான குரல் கோளாறால் அவதிப்படும் ஓர் இளைஞனைப் பற்றிச் சித்தரிக்கின்றது. அவனது கிராமத்தை மோசடி கும்பலிலிருந்துக் காப்பாற்றக் குடும்பத்தினரின் கட்டாயத்தினால் ஒரு காவல்துறை அதிகாரியாகிறான்.

வியாழன், 30 ஏப்ரல்

ஹவுஸ்ஃபுல் 4  (இந்திப் படம் – முதல் ஒளிபரப்பு – ப்ரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே & கிருதி கர்பண்டா

‘ஹவுஸ்ஃபுல் 4’ திரைப்படமானது மூன்று சகோதரிகளைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்த மூன்று சகோதரர்களைப் பற்றிய நகைச்சுவைத் திரைப்படம். சகோதரர்களில் ஒருவர், தற்போதைய தங்களின் ஜோடிகளில் மணப்பெண்கள் கலந்திருப்பதைக் கண்டுபிடித்து, மறுபிறவிக்கேற்ப தங்களின் ஜோடியை சரிசெய்ய முயற்சிக்கிறார்.