Home One Line P1 தேசிய நீர் சேவை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து சார்லஸ் சந்தியாகு நீக்கம்!

தேசிய நீர் சேவை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து சார்லஸ் சந்தியாகு நீக்கம்!

608
0
SHARE
Ad
படம்: நன்றி டி ஸ்டார்

கோலாலம்புர்: தேசிய நீர் சேவை ஆணையத்தின் (ஸ்பான்) தலைவர் பதவியிலிருந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு நீக்கப்பட்டதாக குறிப்பிடும் கடிதம் ஒன்று அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 முதல் அவரது இந்த நியமனம் இரத்து செய்யப்படுவதாகவும், இந்த இரத்து தேசிய நீர் சேவை ஆணையச் சட்டம் 2006 (சட்டம் 654)- 11(1) உட்பிரிவுக்கு உட்பட்டது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அமைச்சர் எந்த நேரத்திலும் ஆணையத்தின் எந்தவொரு உறுப்பினரையும், எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் பதவி நீக்கம் செய்யலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.