Home நாடு கணபதியின் மரணம் குறித்து காவல் துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்

கணபதியின் மரணம் குறித்து காவல் துறை உடனடியாக விசாரிக்க வேண்டும்

627
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தடுப்புக் காவலில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மரணமுற்றதாகக் கூறப்படும் கணபதி என்பவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு கேட்டுக் கொண்டுள்ளார்.

காவல் துறை தடுப்புக் காவலில் ஏற்படும் இறப்புகளுக்கு தீர்வு காண, காவல் துறை புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) உடனடியாக நிறுவப்பட வேண்டும் என்று அவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

“கணபதியின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கும், மரணத்தை ஏற்படுத்திய காவல் துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய காவல் துறைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை விசாரணைகள் உள்ளிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும்,” என்று அவர் டுவிட்டர் பதிவில் கூறினார்.

#TamilSchoolmychoice

கணபதி கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மார்ச் 8- ஆம் தேதி அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு காவல் துறையினரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால், அவர் செலாயாங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 8- ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனது 40 வயதான சகோதரர் கணபதி காலமானதாக அவரது சகோதரி, ஏ. தங்கமலர், 41, மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இறந்தவரின் தாயார், எஸ். தனலெட்சுமி, 60, மார்ச் 11 அன்று கோம்பாக் மாவட்ட காவல் துறை தலைமையகத்தில் புகார் ஒன்றை பதிவு செய்தார். காவல் துறை காவலில் இருந்தபோது தனது மகன் தாக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

பிப்ரவரி 24-ஆம் தேதி கணபதி கைது செய்யப்பட்டார். அவர் தனது மற்றொரு மகனை விசாரிக்க உதவுவதற்காக கைது செய்யப்பட்டார்.

நீரிழிவு நோய் மற்றும் இருதய பிரச்சனைகள் இருந்த போதும், அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்பட்டது.

இருப்பினும், கணபதியின் சகோதரி அவரது மருந்துகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது தனது சகோதரரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறினார்.

மார்ச் 8-ஆம் தேதி, இறந்தவரின் குடும்பத்திற்கு காவல் துறையிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது, கணபதி விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

காவல் துறையினர் அவரை இரப்பர் குழாய் மூலம் தாக்கியதாக தனது மகன் சொன்னதாக தனலெட்சுமி கூறினார். மருத்துவமனையில் இருந்தபோது, ​​கணபதிக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது மற்றும் அவரது கால்கள் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது.

தடுப்புக் காவலில் இருந்ததால் கணபதியின் உடல்நிலை மோசமடைந்தது என்று அவரது குடும்பத்தினர் கூறினர்.