Home One Line P1 கெடா, பெர்லிஸ், பினாங்கு பச்சை நிற மண்டலங்களாக குறிப்பிடப்படலாம்!

கெடா, பெர்லிஸ், பினாங்கு பச்சை நிற மண்டலங்களாக குறிப்பிடப்படலாம்!

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால் தீபகற்பத்தின் மூன்று வடக்கு மாநிலங்கள் கொவிட் -19 பச்சை நிற மண்டலமாக குறிப்பிடப்படும்  என்று சுகாதார அமைச்சின் இயக்குனர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

கொவிட்-19 பாதிப்புகளை வகைப்படுத்த அந்த நோய் தொற்றுக் கண்டிருக்கும்

#TamilSchoolmychoice

கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை இந்த பாதிப்பிலிருந்து  14 நாட்களுக்கு விடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

“கெடா, பெர்லிஸ் மற்றும் பினாங்கு ஆகியவை சமீபத்திய நாட்களில் எந்தவொரு புதிய சம்பவங்களையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், மிக முக்கியமாக, அந்த பகுதி இந்த தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டது என்பதற்கு   14 நாட்கள் கொரொனா நச்சுயிரி வளர்ச்சி அடையும்  காலத்திற்கு காத்திருக்க வேண்டும்.  எனவே இப்போது நாங்கள்  அதைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 14 நாட்களுக்குள் மூன்று மாநிலங்களில் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றால், நாங்கள் அதை ஒரு பசுமை மாநிலமாகக் கருதலாம்” என்று அவர் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கூறினார்.