புதுடில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமாகப் பரவ முக்கியக் காரணமாக இங்கு கடந்த மாதத்தில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு கருதப்படுகிறது.
இந்நிலையில், கடந்த மாதத்தில் கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக் ஜமாத் கூட்டத்தினை ஏற்பாடு செய்ததற்காகக் காவல் துறையினர் அதன் தலைவர் மௌலானா சாஹாட் மீது குற்றம் சாட்டியிருந்தனர்.
தற்போது, அவர் மீது பண மோசடி வழக்கினை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
இந்திய அளவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000-க்கும் மேல் பதிவாகியுள்ள நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இந்த மாநாடு கொவிட் தொற்று பரவத் தொடங்கிய முக்கியக் காரணியாக அமைந்தது என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றினைத் தடுக்க டில்லி அரசு கூட்டம் கூடுவதை சட்ட விரோதம் என்று அறிவித்திருந்ததைப் பொருட்படுத்தாது, சட்ட விரோதமாக கூட்டத்தினை கூட்டியதற்காக மௌலானா மீது டில்லி காவல்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.