Home One Line P2 கனடாவில் காவல் துறை அதிகாரி உடையணிந்து 13 பேரைக் கொன்ற ஆடவன் சுட்டுக் கொலை!

கனடாவில் காவல் துறை அதிகாரி உடையணிந்து 13 பேரைக் கொன்ற ஆடவன் சுட்டுக் கொலை!

674
0
SHARE
Ad

டிரெண்டன்: கனடாவின் நோவா ஸ்கொட்டியா மாகாணத்தில் குறைந்தது 13 பேர், கனடிய காவல் துறை அதிகாரி உடையணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் ஒருவர் காவல் துறை அதிகாரியாவார். மற்றொரு அதிகாரி காயமடைந்துள்ளார். சந்தேக நபர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை, ஆனால் கொலை மாகாணத்தின் பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.

#TamilSchoolmychoice

சனிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன்னர் இந்த கொலைகள் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்துள்ளதாகவும், சந்தேகநபர், 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன், காவல் துறையினர் உடையணிந்து, மாகாணம் முழுவதும் சென்றதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகநபர் வசித்து வந்த சுமார் 300 குடியிருப்பாளர்களைக் கொண்ட நோவா ஸ்கொட்டியாவின் போர்டாபிக் என்ற சிறிய கிராமத்தில் இந்த சீற்றம் தொடங்கியது.

குறைந்தது 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.

நோவா ஸ்கோடியா முதல்வர் ஸ்டீபன் மெக்நீல் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் இந்த கொலைகள் குறித்து உரையாற்றிய போது, “இது எங்கள் மாகாண வரலாற்றில் மிகவும் கொடுரமான வன்முறைச் செயல்களில் ஒன்றாகும்” என்று கூறினார்.

​​”ஒரு பயங்கரமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது அனுதாபங்கள்,” என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த சம்பவத்தைக் குறித்துப் பேசியுள்ளார்.

உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை, ஏனெனில் சாத்தியமான குற்றக் காட்சிகளை காவல் துறையினர் இன்னும் விசாரித்து வருகின்றனர் என்றும் பலியானவர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கொலைகளுக்கு எந்த நோக்கமும் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.