Home One Line P2 கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,016 சம்பவங்கள் பதிவு!

கொவிட்-19: சிங்கப்பூரில் ஒரே நாளில் 1,016 சம்பவங்கள் பதிவு!

486
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் இன்று புதன்கிழமை கூடுதலாக 1,016 கொவிட் -19 நோய்த்தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் அக்குடியரசில் மொத்தமாக 10,168 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் பணி அனுமதி வைத்திருப்பவர்கள் என்றும், 15 சம்பவங்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களை சம்பந்தப்படுத்தியது என்று அது குறிப்பிட்டுள்ளது .

“நாங்கள் இன்னும் சம்பவங்களின் விவரங்களை விசாரித்து வருகிறோம், மேலும் விவரங்கள் இன்று இரவு செய்திக்குறிப்பு மூலம் பகிரப்படும்” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

சிங்கப்பூரில் பரவியுள்ள கொவிட்-19 தொற்று மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.