புது டில்லி: இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்கும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உணவுப் பங்குகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.
வருமானம் இழந்ததால் ஏழைகள் மனச்சோர்வடைந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
கிடங்கிலிருந்து தானிய சேமிப்பை வெளியேற்றுமாறு ஜெயதி கோஷ் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
பல தொழிலாளர்கள் இப்போது வருமானமும், உணவும் இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.