Home இயக்கங்கள் தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டு டாக்டர் அக்சயகுமார் வாழ்த்து

தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டு டாக்டர் அக்சயகுமார் வாழ்த்து

727
0
SHARE
Ad

aksya-kumarகோலாலம்பூர், ஏப்ரல் 11- உகாதி திருநாள் தெலுங்கு வம்சாவளியினரால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பெருவிழாவாகும்.

பல்லின மக்கள் வாழும் இத்திருநாட்டில் பிற மொழி பேசும் மக்களுடன் நல்லுறவு கொண்டு கூடி வாழ்ந்து மக்கள் அனைவரையும்  அன்பு உறவினர்களாக ஏற்று பல்லாண்டு காலமாக இணக்கமுடனும், அன்புடனும் அரவணைத்து வாழ்ந்து வருகின்றனர் என்றும் இத்திருநாளை  முன்னிட்டு இந்தச் சகோதர தன்மையை மேலும் பலப்படுத்துவோம் என்று மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அக்சயகுமார்  தெரிவித்தார்.

இந்தத்  திருநாள் நமது சமூகத்தின் ஒற்றுமையை, கல்வி வளர்ச்சியை, பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்தும் எனும் நம்பிக்கையுடன் இந்த ஆண்டு உகாதி திருநாளை கொண்டாடி மகிழ்வோம் என தமது வாழ்த்துக்களை அனைத்து தெலுங்கு சமூகத்தினருக்கும் தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

tamஇந்த ஆண்டு உகாதி புத்தாண்டில் மலேசிய வாழ் தெலுங்கு சமூகம் கல்வியிலும், பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் மேம்பாடு அடைந்த சமூகமாகவும் உறுதி புனைவதோடு இந்த ஆண்டை தெலுங்கு மொழி கற்கும் ஆண்டாக இச்சங்கம் பிரகடனம் செய்துள்ளது.

இவ்வாண்டு மலேசிய  தெலுங்கு சங்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக 10 ஆவது உலக தெலுங்கு மாநாட்டை தலைமையேற்று நடத்துவதற்கு வாய்ப்பும் வழங்கியதாகும்.

உகாதி புத்தாண்டை முன்னிட்டு நடைபெறவுள்ள இம்மாநாடு ஏப்ரல் மாதம் 12 முதல் 14 வரை கோலாலம்பூரில் அமைந்துள்ள சன்வே மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. மலேசிய தெலுங்கு சங்கமும் உலக தெலுங்கு சம்மேளனமும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன.

மலேசிய தெலுங்கு பேராளர்களோடு வெளிநாட்டு பேராளர்கள் சுமார் 2,500 தெலுங்கு பேராளர்கள் இம்மாநாட்டில் பங்கு பெறவுள்ளனர். இம்மாபெரும் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க  நமது பிரதமரைஅணுகியிருப்பதாகவும் சிறப்பு விருந்தினராக தமிழ் நாட்டின் மேதகு ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யா வருகை புரிவதாகவும், இவர்களோடு ஆந்திர மாநில அமைச்சர்கள் இருவரும், இதர முக்கிய பிரமுகர்களும் நம் நாட்டின் பிரமுகர்களும் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் டத்தோ டாக்டர் அக்சய குமார் ராவ் தெரிவித்தார்.