Home இயக்கங்கள் தெலுங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு ரி.ம 15 லட்சம் மானியம்- லாஹிட் ஹமிட் அறிவிப்பு

தெலுங்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு ரி.ம 15 லட்சம் மானியம்- லாஹிட் ஹமிட் அறிவிப்பு

831
0
SHARE
Ad

hamidiகோலாலம்பூர், ஏப்ரல் 15- உகாதி புத்தாண்டை முன்னிட்டு  தலைநகரில் அமைந்துள்ள சன்வே மாநாட்டு மையத்தில் ஏப்ரல் மாதம் 12 தேதி முதல் 14 தேதி வரை உலகத் தெலுங்கு சம்மேளன மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய தெலுங்கு சங்கமும் உலகத் தெலுங்கு சம்மேளனமும் இணைந்து இம்மாநாட்டை கோலாகலமாக நடத்தியது.

10ஆவது தெலுங்கு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவுச் செய்து உரையாற்றும் போது மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின்  பிரதிநிதியாக கலந்து கொண்ட தற்காப்பு அமைச்சர்  டத்தோஸ்ரீ லாஹிட் ஹமிடி  மலேசியாவின் மேம்பாட்டில், தெலுங்கு வம்சாவளியினரின் பங்களிப்பை அரசாங்கம் மறந்து விடவில்லை என்று அவர் சொன்னார்.

#TamilSchoolmychoice

“தெலுங்கு சமூகத்தின் மொழி, கலை கலாச்சார பண்பாடு மேம்பாட்டிற்கு அரசாங்கம் எப்போதுமே உறுதுணையாக இருந்து வருகிறது. அதேசமயம் பேராவில் அமைந்துள்ள பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் அதிகமான தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள்.  இவர்கள் தேசிய முன்னணிக்கு பக்கபலமாகவே இருந்து வருகின்றனர்” என்று டத்தோஸ்ரீ லாஹிட் ஹமிடி நிகழ்வில் கூறினார்.

tamaksya-kumarமலேசிய தெலுங்கு சங்கத்திற்கு நமது அரசாங்கம் எப்போதுமே உதவி செய்து வருகிறது. ரி.ம 15 லட்சம் வெள்ளி மானியம் அறிவிக்கப்பட்டது போல இன்னும் பல உதவிகள் காத்திருக்கின்றன.  எனவே, இதனை கருத்தில் கொண்டு நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளரும் வரும் பொதுத் தேர்தலில் விவேகத்துடன் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிறைவு விழாவில் மலேசிய தெலுங்கு சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் அட்சயகுமார் ராவ், உலக தெலுங்கு சம்மேளத்தின் தலைவர் ஸ்ரீமதி வி.எல்.இந்திரா டட், இந்திய ராஜாங்க அமைச்சர் ஸ்ரீ பலராம் நாயக், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சலமேஸ்வர ராவ் ஆகியோர் இந்நிகழ்வில் உரையாற்றினார்கள்.