Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் தொகுதிகளில் மும்முனைப் போட்டி?

910
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், ஏப்ரல் 15 – நேற்றிரவு சிலாங்கூர் உலு கிளாங் பகுதியில் பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மாநிலத்தில்  பிகேஆர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்ததைத் தொடர்ந்து, செமினி சட்டமன்ற தொகுதியில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

காரணம் கடந்த 2008 ஆண்டு பொதுத்தேர்தலில், பிஎஸ்எம் கட்சி ( Parti Sosialis Malaysia ) போட்டியிட்ட சிலாங்கூர் மாநில தொகுதிகளில்,வருகிற பொதுத்தேர்தலில் பிகேஆர் வேட்பாளர்களை நிறுத்த அன்வார் முடிவு செய்து, அதன் படி நேற்று செமினி தொகுதிக்கு, செர்டாங் பிகேஆர் தலைவர் ஹாமீடி ஹசானை வேட்பாளராக அறிவித்தார்.

இதனால் செமினி தொகுதியில், பிகேஆர் வேட்பாளர் ஹாமீடி ஹசான், பிஎஸ்எம் கட்சியின் தலைமைச் செயலாளர் எஸ் அருட்செல்வன் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர் ஆகிய மூவர் போட்டியிடுவதால் அங்கு மும்முனைப் போட்டி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், தற்போது பிஎஸ்எம் வசமுள்ள மற்ற தொகுதியான கோத்தா டாமான்சாராவில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அன்வார் அறிவிக்கவில்லை. அதுபற்றி அக்கட்சித்தலைவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்ட பிஎஸ்எம் கட்சி தற்போது தனது சொந்த சின்னமான கை முஷ்டியிலேயே போட்டியிட விரும்புகிறது. ஆனால் மக்கள் மத்தியில் கை முஷ்டி சின்னம் இன்னும் அத்தனை பரீட்சயமாகாத சூழலில் பிகேஆர் அவர்களது விரும்பத்தை ஏற்கவில்லை என்று தெரிகிறது.

எனவே, சிலாங்கூர் மாநிலத்தில் பிஎஸ்எம் போட்டியிட்ட தொகுதிகளில், வரும் பொதுத்தேர்தலில் பிகேஆர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா அல்லது பிஎஸ்எம் கட்சி தனது வேட்பாளர்களை தானே முடிவு செய்யுமா என்பது இன்று இரவு தெரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.