கோலாலம்பூர், ஏப்ரல் 12- தெலுங்கு உகாதி புத்தாண்டை முன்னிட்டு 12,13,14 ஆம் தேதி ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு உலகத் தெலுங்கு சம்மேளன மாநாடு சன்வே பிரமிட் மாநாட்டு மண்டபத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.
இந்நிகழ்வு உலகத் தெலுங்கு சம்மேளனமும் மலேசியத் தெலுங்கு சங்கமும் இணைந்து நடத்தும் 10ஆவது மாநாட்டு நிகழ்வாகும்.
தெலுங்கு மொழி, மொழியியல், தொழில்நுட்ப மேம்பாட்டு ஆய்வுக் கருத்தரங்கம், அனைத்துலக மகளிர் கருத்தரங்கம், அனைத்துலக இளைஞர் கருத்தரங்கம் என பல கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளது. மேலும், உலகத் தெலுங்கு சம்மேளன அனைத்துலக வர்த்தகக் கருத்தரங்கமும் கண்காட்சிகளும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து, சாதனையாளர் விருதுகள், கெளரவிப்புகள், அனைத்துலக கலைவிழா என பல நிகழ்ச்சிகள் இம்மாநாட்டில் சிறப்பு சேர்க்கவுள்ளன.