Home அரசியல் குவாந்தான் நாடாளுமன்றம் மற்றும் இரு சட்டமன்றங்களில் போட்டியிடவில்லை – ம.சீ.ச உறுதி

குவாந்தான் நாடாளுமன்றம் மற்றும் இரு சட்டமன்றங்களில் போட்டியிடவில்லை – ம.சீ.ச உறுதி

670
0
SHARE
Ad

PTJ03_260106_CHUA_TBPகோலாலம்பூர், ஏப்ரல் 12 – பொதுத்தேர்தலில் குவாந்தான் நாடாளுமன்ற தொகுதி மற்றும் இன்னும் இரு சட்டமன்ற தொகுதிகளை, அம்னோவிற்கு விட்டுக்கொடுக்க ம.சீ.ச கட்சி முன்வந்துள்ளது.

இது குறித்து ம.சீ.ச கட்சியின் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகையில்,

“பொதுத்தேர்தலில், 63 சதவிகித மலாய் இன மக்கள் வாழும் குவாந்தான் நாடாளுமன்ற தொகுதியில், அம்னோ  போட்டியிடும் வகையில் ம.சீ.ச வழிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது தவிர மலாக்காவிலுள்ள கோத்தா லஷ்மணா மற்றும் ஜெலாபாங் அல்லது துரோனோ ஆகிய சட்டமன்ற தொகுதிகளை பி.பி.பி கட்சிக்கு விட்டுக்கொடுக்கிறது.

மேலும் பேராக் மாநிலத்தில் ம.இ.கா இரு சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால், ம.இ.காவுடன் ம.சீ.ச கொண்டிருக்கும் நட்பின் காரணமாக, அவர்களுக்கு எந்த தொகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்பது பற்றி கலந்தாலோசித்து வருகிறோம்.

அத்துடன் ம.சீ.ச வின் பாரம்பரியத் தொகுதியான கேலாங் பாத்தா மற்றும் வாங்சா மாஜு ஆகிய தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன” என்று சொய் லெக் தெரிவித்துள்ளார்.

தொகுதி பரிமாற்றங்கள்

தொகுதி பரிமாற்றங்கள் குறித்து சொய் லெக் கூறுகையில், “பகாங் மாநிலத்தில் உள்ள தானா ராத்தா தொகுதியை கெராக்கான் கட்சிக்கு கொடுத்து, அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து கெடாரி தொகுதியை ம.சீ.ச பெற்றுக்கொள்கிறது.மேலும் சபா மாநிலத்தில் உள்ள லுயாங் சட்டமன்ற தொகுதியையும் ம.சீ.ச பெறுகிறது.

இந்த தொகுதி பரிமாற்றங்கள் கட்சியிலுள்ள பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் ஆனால் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர இது போன்ற முடிவுகள் கட்டாயம் தேவை ” என்று  தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில், ம.சீ.ச போட்டியிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளையும், 90 சட்டமன்ற தொகுதிகளில் 32 தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.