Home நாடு மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்

மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் இறங்கினர்

992
0
SHARE
Ad

குவாந்தான்: கம்போங் பெசெரா பகுதி மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த வாரத் தொடக்கத்தை ஒப்பிடும்போது இன்று (சனிக்கிழமை) நல்ல வானிலை நிலவுவதால், அவர்கள் இம்முடிவுக்கு வந்ததாக மீனவர், அசிஸ் ரசாலி கூறினார்.

காற்று வலுவாக வீசவில்லை, மேலும் அலைகள் சிறிய அளவிலேயே இருக்கிறது. எனவே, எட்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மீன் பிடிக்கப் போகிறோம்”, என அசிஸ் கூறினார்.

இது குறித்து மலேசிய வானிலை திணைக்களத்திடம் கண்டறிந்து விட்டதாகவும், அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகே தாங்கள் கடலுக்குள் இறங்குவதாகவும் மீனவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய் தொடங்கி, நேற்று வரையிலும், மலேசியாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய பாபுக்கின் வெப்பமண்டல புயலின் விளைவாக, கடல் மட்டத்தின் அளவும், அலைகளும் சற்றே உயர்ந்திருந்தன. இதன் விளைவாக பெரிய அளவிலான அலைகள் கடற்கரையைத் தாக்கின.

கடந்த வியாழன் இரவு வலுவான அலைகள் சூழ்ந்து வந்ததால் மீனவர்கள் புயலுக்கு அஞ்சி கடலில் இறங்கவில்லை.

மலேசிய வானிலை திணைக்களம் நேற்று ஓர் அறிக்கையில், பாபுக் புயல் சியாம் வளைகுடாவில் மையம் கொண்டிருப்பதாகவும், கிரா பூசந்தியை கடக்கும் எனவும் அறிவித்திருந்தது.